Skip to content

இவை மறைவு காய் மறைவு #7115

Open

Description

@virattipathuradha-svg

“இப்படி பயந்து பயந்து என்னால வாழ முடியாது”.
“பயந்து வாழச் சொல்லல, முன்னெச்சரிக்கையாக இருக்கனும்னு தான் சொல்றேன்”
“அதுக்காக வீட்டிலேயே முடங்கி கிடக்கவா?”
“காலம் கலிகாலம், கல்லுக்கு கலர் துணி கட்டுனா கூட தூக்கி பாக்குற உலகம், உன்ன ஒருத்தன் கிட்ட பிடிச்சு கொடுக்கிற வரைக்கும் நான் சொல்றபடி கேளு”
“உன்கிட்ட போராடி போராடி கல்லூரி படிப்பு வரைக்கும் வந்துட்டேன், அதுக்கேத்த வேலைக்கு போறேன்னு சொன்னா வேணாங்கிறியே”
“சொல்றத கேளு, உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்”
மகள் கண்ணம்மாவும் அம்மா சின்னம்மாவும் வாதாடி கொண்டிருந்தனர்.
சின்னம்மா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். மூக்கும் முழியுமாக பார்க்க லட்சணமாக இருப்பாள். கேப்பை புட்டு நிறம். அதில் எப்பொழுதும் மஞ்சத்தூள் கோட்டிங் பளபளக்கும். மகளும் காலத்திற்கு ஏற்ப அம்மாவை பிரதிபலித்தாள்.
சின்னம்மாவின் கணவர் திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் வேறொரு பெண்ணுடன் காதலாகி கசிந்துருகி விட்டார். பெண் குழந்தையுடன் தத்தளித்த சின்னம்மாவுக்கு ஆதரவாக அவர் தந்தையின் அரசு வேலை கிடைத்தது.
பெண் பிள்ளையை வெளியே விடாமல் பாதுகாக்க, கண்ணம்மாவின் படிப்பை ஐந்தாவதோடு நிறுத்த பார்த்தாள் சின்னம்மா
மேலும் படிக்க ஆசைப்பட்ட கண்ணம்மா, பக்கத்து வீட்டு பத்மாவை சிபாரிசு செய்ய வேண்டினாள்.
“படிக்க ஆசைப்படுற பிள்ளைய அதுபோக்குல விடுக்கா… ஒன்னும் ஆகாது”
“எப்ப என்ன நடக்கும்னு சொல்ல முடியாது பத்மா”
“அட நீ வேற, ரோட்ல 1000 பேர் நடந்து போறாங்க, யாரோ ஒருத்தர், இரண்டு பேர் மேல கார் மோதுது, அதுக்காக யாருமே ரோட்டுல நடக்காமயா இருக்காங்க”
“நீ வீட்ல கிடக்குற, நான் வெளியே வேலைக்கு போயிட்டு வரும்போது நடக்கிற சம்பவங்கள பாத்தா ரொம்ப பயமா இருக்குது”
“ஒன்னும் நடக்காதுக்கா, எல்லாம் கடவுள் பார்த்துப்பார்”
“ரோட்டுல போனா ஒவ்வொருத்தன் பார்க்கிற பார்வையும், செய்கிற செய்கையும் பார்த்தா நம்ம பிள்ளையாவது இந்த அசிங்கங்கள்ள இருந்து தப்பிக்கணும்னு தோணுது”
“வெளியே போனா தான் நல்லது கெட்டது தெரியும், எதையும் சமாளிக்கிற தைரியம் வரும்”
“வேலைக்கு போனா, அங்க எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் பாக்கிறாய்ங்க. ஒரு நாள் வேலைக்கு அஞ்சு நிமிஷம் லேட்டா போயிட்டேன், சம்பளத்தைப் பிடிச்சிருவேன்னு சூப்பர்வைசர் சரசமாட கூப்பிடுறான். இந்தப் பிள்ளைக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்.”
“நீ சரின்னு சொல்லு, நான் பொறுப்பு, என் பிள்ளைய ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகும் போது கண்ணம்மாவையும் கூட்டிட்டு போறேன், கவலைப்படாத”
இப்படி பத்மா சிபாரிசில் கண்ணம்மா கல்லூரிப் படிப்பு வரை முடித்து விட்டாள். அடுத்து வேலைக்கு போகத்தான் திரும்பவும் விவாதம்.
“என்னக்கா.. திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிருச்சா. கண்ணம்மா கஷ்டப்பட்டு படிச்சிட்டா, அந்த படிப்பு நாலு பேருக்கு உதவுற மாதிரி வேலைக்கு போகட்டுமே”
“கூட்டத்தோடு கூட்டமா சேர்ந்து பாதுகாப்பா படிச்சிட்டா பதமா, வேலைங்கறது அப்படி இல்ல, அங்கே கொடுமை கொஞ்ச நஞ்சமா இருக்காது. எங்க ஆபீஸ்ல எல்லாம் எப்படா இவளை கவுக்கலாம்னு அலைவாய்ங்க”
“உன் காலம் வேறக்கா, இப்ப கடுமையான சட்டங்களெல்லாம் வந்துருச்சு”
“சட்டங்கள் நம்ம காப்பாத்துறதுக்கு இல்ல பத்மா, சம்பவம் நடந்த பிறகு குற்றவாளிக்கு தண்டனை குடுக்கிறதுக்காக”
பத்மா அதையும் இதையும் சொல்லி சின்னம்மாவை சமாளித்து கண்ணம்மாவை வேலைக்கு போக ஏற்பாடு செய்து விட்டாள்.
வேலைக்கு சென்று ஆறு மாதங்கள் ஆயிருக்கும். மாலை 7 மணிக்கு திரும்ப வேண்டிய கண்ணம்மா வீட்டுக்கு வரவில்லை. இரவு 10 மணி ஆகியும் வரவில்லை. சின்னம்மா குய்யோ முறையோ என கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். யாராலும் தேற்ற முடியவில்லை.
“வேணாம் வேணாம்ன்னு சொன்னனே பத்மா, இப்ப பாரு நான் பயந்த மாதிரி நடந்துருச்சு”
“பொறுமையா இருக்கா, அவ கூட வேலை பாக்குற வசந்தி கிட்ட போன்ல விசாரிக்கிறேன்”
வசந்தி உடனே போனை எடுக்கவில்லை. ஒரு மணி நேரம் கழித்து அவளே பேசினாள்.
ரொம்ப நேரம் தகவல்களை கேட்டுக் கொண்டிருந்தாள் பதமா. ஆனால் சின்னம்மாவிடம் சுருக்கமாக “அக்கா கண்ணம்மாவை அவசர ஆபீஸ் வேலையாக பெங்களூருக்கு அனுப்பி இருக்காங்கலாம். ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு வந்துருவாளாம்”
அன்று பஸ்ஸில் இறங்கி வீட்டுக்கு வரும் வழியில் அந்த ஏரியா மைனர் தங்கதுரை கண்ணம்மாவை காரில் கடத்தி சென்றதையும், கரும்பு காட்டுக்கு கொண்டு சென்று பலவந்தப்படுத்தியதையும் பத்மா சின்னம்மாவிடம் சொல்லவில்லை. சொன்னால் திரும்ப கண்ணம்மாவை வீட்டில் வைத்து பூட்டி விடுவாள். வசந்தி தான் சொல்ல வேண்டாம் என சொல்லி பெங்களூர் கதையை சொன்னவள். கண்ணம்மா தங்கத்துரையின் உயிர் நிலையில் காலால் உதைத்து தப்பியதை கேட்டு பத்மா நிம்மதி அடைந்தாள். உடலில் ஏற்பட்ட சின்ன சின்ன சிராய்ப்புகளுக்கு சிகிச்சை எடுத்து கொண்டு வசந்தியின் ஹாஸ்டல் அறையில் ஓய்வில் இருக்கிறாள் என்ற தகவலும் தகிப்பை மட்டுப்படுத்தியது.
ஆறு மாதம் கழிந்திருக்கும். அடிபட்ட பூனையாய் தங்கத்துரை வன்மத்துடன் காத்திருந்தான்.
தனியாக சமாளிக்க முடியாது என நினைத்து இரண்டு கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் கண்ணம்மாவை கடத்தினான். தனி இடத்திற்கு கொண்டு சென்று மூன்று பேரும் பலவந்தப்படுத்தினார்கள். மூன்று பேரையும் சமாளித்து போராடி தப்பும் போது தொடர் தோல்வியை தாங்க முடியாத தங்கத்துரை அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து கண்ணம்மாவின் தலையில் அடித்தான். கண்ணம்மா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். இறந்துவிட்டாள் என நினைத்து மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர்.
வேலைக்கு போன கண்ணம்மா இரவு நெடு நேரம் ஆகியும் திரும்பவில்லை என்றவுடன் சின்னம்மா பழையபடி பதற ஆரம்பித்தாள். பத்மா இது இரண்டாவது பலத்த முயற்சியாக இருக்கும் என உணர்ந்து போலீசில் புகார் செய்தாள்.
போலீஸ் கண்ணம்மாவின் செல் போன் டவர் ஏரியாவை ஆராய்ந்து கண்ணம்மாவை மீட்டு ஜி.ஹெச்.சில் சேர்த்தனர். கோமா நிலையில் இருந்த கண்ணம்மாவுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. செல்போன் சிக்னல்களை வைத்தே தங்கத்துரையையும் அவனது கூட்டாளிகளையும் வளைத்த போலீஸ், காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது அவர்களின் முறிந்த கால்களுக்கு மாவு கட்டு போட்டது.
மருத்துவமனையில் சின்னம்மா அழுது அழுது ஓய்ந்து விட்டாள். பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை என மாநில முழுவதும் போராட்டம் வெடிக்க சமூக நலத்துறை அமைச்சர் சின்னம்மாவிற்கு ஆறுதல் கூற வந்தார். ஆறுதல் கூறிவிட்டு நிவாரணமாக ரூபாய் 5 லட்சம் காசோலை வழங்க முற்பட்டார்.
வாங்க மறுத்து சின்னம்மா,“இது மாதிரியான நிலை இனி எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. அதுக்கு உங்களால முடிஞ்சா ஒரு உபகாரம் பண்ணுங்க. இலை மறைவு காய் மறைவா இருக்கிறதால தான் அது மேல ஒரு ஆர்வம் வருது. இது தான் அது, அது தான் இதுன்னு செக்ஸ் கல்வியை பள்ளிப் பருவத்திலேயே பாடமா சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செஞ்சிங்கன்னா இது மாதிரியான குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கு, பெற்றோர்களுக்கு இது பெரிய நிவாரணமாக இருக்கும்.”

- வ.தங்கம் ராதா, மதுரை 

Thank you for your interest in adding a Web Story creation resource to amp.dev.

The Web Stories submitted below will be run through the AMP Linter to ensure that they are valid Web Stories. In order to proceed, all Web Stories submitted must pass all AMP Linter tests.

If our team has any feedback, it will be provided directly on the request issue. If there are no outstanding issues, your tool will be listed on amp.dev.

If your tool is already listed and you would like to change a description or image, please re-open the original issue created to list your resource on amp.dev.

Please note that the criteria and process for being listed or remaining listed on amp.dev may change at any time. Tools that do not meet updated criteria over time may be removed.

Note: Passing the AMP Linter tests ensures that your tool produces valid Web Stories, but it does not ensure that the story is of high quality and enjoyable for users. It is recommended that you build features and guardrails into your tools that help story creators adhere to the Web Story Best Practices.

Please fill in the template below.
-->

🛠️ Request to Add Third-Party Story Creation Tool/CMS/Platform

Story creation resource name

< Insert name here >

Type

Use [x] to mark a selection:

  • Story Creation Tool
  • CMS
  • Platform
  • Other

URL

< Insert URL to Tool/CMS/Platform here >

Image

< Please provide a screenshot of your resource’s editor window (min. 800x400 pixels) to appear on the Tools page. JPEG, PNG or SVG images are acceptable >

Description

< Please provide a short description (max. 100 characters) to appear on the Tools page. >

List of Stories

< Please list 10 Web Stories across a diverse set of topics/treatments that each meet the following criteria

  • Minimum of 7 pages
  • At least 4 images
  • At least 2 videos
  • At least four pages with some text >

Activity

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment

Metadata

Metadata

Assignees

No one assigned

    Labels

    No labels
    No labels

    Type

    No type

    Projects

    No projects

      Milestone

      No milestone

      Relationships

      None yet

      Development

      No branches or pull requests

      Issue actions